Ads Area

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... அரபு நாடுகளைப் போல் மக்கள் முன் துாக்கிலிட வேண்டும்.

தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் தலை குணிவான பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அரபு நாடுகளில் தண்டனை வழங்குவதுபோல், அந்த கயவர்களை இழுத்துவந்து மக்கள் சபை முன்பு கழுவிலேற்றி தூக்கிலிட வேண்டும் என பா.விஜய் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை நம்பி வந்த ஒரு பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

சமூகவலைதளங்களின் வாயிலாக பெண்களிடம் நட்பாகப் பழகி சுமார் 200 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தக் கொடூரம் தொடர்பாக, பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களது ஜாமினும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe