கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் (Ph. D) அவர்களினால் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
08.03.2019
கடந்த 2018ம் ஆண்டில் கௌரவ. அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுத்தீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் கௌரவ. நவவி அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட DCB நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் (Ph. D) அவர்களினால் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 08.03.2019ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனை மன்றத்தில் வெகுவிமரிசியாக இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.M ஹனீபா , உதவி பிரதேச செயலாளர் ஆசிக் , திட்டமிடல் பணிப்பாளர் A.L அப்துல் மஜீட், கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி U.L.M. சமீம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
நான்கு விளையாட்டு கழகங்களுக்கு DCB நிதியிலிருந்து இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் "கௌண்டி" விளையாட்டு கழகம் சார்பாக நூர் முஹம்மட் அவர்களும் "ஈஸ்டன்" றோயல் விளையாட்டு கழகம் சார்பாக அசாம் அவர்களும் "யுனிட்டி" விளையாட்டு கழகம் சார்பாக முசாபிர் அவர்களும் 'ரேஞ்சர்ஸ்" விளையாட்டு கழகம் சார்பாக அசாம் அவர்களும் விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொண்டார்கள்.