அண்மைய நாட்களில் நாடு பூராகவும் ஏற்படுத்தப்பட்ட மின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.