2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாலை பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது, வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஜேவிபி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.