Ads Area

சவுதி அரேபியாவில் 900 போலி இன்ஜினியர்கள் கைது.

சவுதி அரேபியாவில் போலி பொறியியலாளர் டிப்ளோமா (Engineering Diploma) மற்றும் டிக்கிரிக்களை (Degree) வைத்து பணி செய்து வந்த 900 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் டிப்ளோமா மற்றும் டிக்கிரிக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய இன்ஜினியரின் கவுன்சில் (Saudi Council of Engineering - SCE) தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சவுதி அரேபிய இன்ஜினியரின் கவுன்சில் (Saudi Council of Engineering - SCE)  பேச்சாளர் அப்துல் நாசர் அல் அப்துல் லத்தீப் மேலும் தெரிவிக்கையில்,

சவுதி அரேபியாவில் பணி புரியும் பலர் போலிச் சான்றிதழ்களோடு பணி புரிவதாகவும் இதுவரை சுமார் 2000 போலிச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் சான்றிதழ்களை பரீசீலனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் பொறியியலாளர்களாக, தொழில்நுட்ப வல்லுனர்களாக பணி செய்வோர் தங்கள் டிக்கிரி மற்றும் டிப்ளோமாக்களை Saudi Council of Engineering - SCE இல் பதிவு செய்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு பதிவு செய்து உறுதிப்படுத்தத் தவறுபவர்கள் குற்றவாளியாக கருதப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போலிச் சான்றிதழ்களோடு பணி செய்வோர் அடையாளம் காணப்படுமிடத்து அவர்கள் 1 மில்லியம் சவுதி றியால்களை தண்டப்பணமாக செலுத்துவதோடு பணிபுரிவதிலிருந்தும் நீக்கப்படுவார்கள் எனவும் Saudi Council of Engineering - SCE தெரிவித்துள்ளது.

செய்தி மூலம் - saudigazette
தமிழில்  - மக்கள் நண்பன் அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe