அஹமட் சாஜித் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை, நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் முயற்சியின் பலனாக பொத்துவில் பிரதேசத்தில் வீடுகள் இல்லாமல் கஸ்டங்களை எதிர்நோக்கும் ஏழைக்குடும்பங்கள், திருமணங்கள் செய்வதற்கு வீடுவாசல் இல்லாமல் கஸ்டப்படும் பெண்களின் தேவைகளையும், குறைகளையும் அறிந்து, துபாய் நாட்டு அரசாங்கத்தின் தனவந்தர்களின் உதவியின் மூலம் கடந்த வருடம் 50 வீடுகள், பள்ளிவாசல், பாடசாலை, சிறிய வைத்தியசாலை போன்றன உள்ளடங்கிய வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்நடும் நிகழ்வு கடந்தவருடம் பொத்துவில் சிரியா பகுதியில் அமைச்சரின் வருகையோடு இடம்பெற்றது.







