காரைதீவு நிருபர்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் நடாத்தும் ‘கிழக்கு மாகாண ஊடகவியலாளர் விருது விழா’ ஞாயிற்றுக்கிழமை (2019-03-31) மாலை கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவப்பெரும ஸ்ரீயானி விஜய விக்கிரம அமீர்அலி ஏ.எல்.எம்.நஸீர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருடன் பிரதேசசெயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழ் ஊடகவிழயலாளர் போரத்தின் தலைவர் அனந்த பாலகிட்ணர் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன் சிங்கள் தொழிற்சங்கவாதிகளாளும் கலநதுகொண்டு கௌரவித்தனர்.
போரத்தின் செயலாளர் எ.ஜே.எம்.ஹனிபா நன்றியுரையாற்றினார்.








