கோடைகாலம் என்றில்லை, எல்லா காலத்திலும் காரில் ஏசி சிஸ்டத்தின் பயன்பாடு இன்றைக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கார் ஏசி சிஸ்டத்தை முறையாக கையாண்டால், பிரச்னைகள் இல்லாத சுகமான பயணத்திற்கு வழி வகுக்கும். கார் ஏசி சிஸ்டத்தை முறையாக கையாள்வதன் மூலமாக பல அனுகூலங்களை பெற முடியும்.
எந்தெந்த நேரத்தில் கார் ஏசியை எவ்வாறு இயக்குவது குறித்த சில வழிகாட்டு முறைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கோடை நேரத்தில் பூட்டியிருக்கும் காரின் கேபினுக்குள் அதிக வெப்பக் காற்று தங்கியிருக்கும். எனவே, காரின் கதவுகளை சில நிமிடங்களில் திறந்து வைத்துவிட்டு, சூடான காற்று வெளியேறியவுடன் ஏசியை ஆன் செய்யவும். ஜன்னல்களும் சிறிது நேரம் திறந்து வைத்திருப்பதும் நலம்தான்.
காரை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆன் செய்தவுடனே ஏசி சுவிட்சுக்கு அருகில் இருக்கும் கேபின் காற்றை மறுசுழற்சி செய்து தரும் பட்டனை ஆஃப் செய்துவிடவும். இதனால், கேபினில் உள்ள சூடான காற்று, பிளாஸ்டிக் பாகங்களால் வரும் நெடி மற்றும் நச்சுக் காற்றை ஏசி மூலமாக வெளியேற்ற முடியும். சிறிது நேரம் கழித்து காற்று மறுசுழற்சி பட்டனை ஆன் செய்யவும்.
இதேபோன்று, வெளிப்புறத்திலிருந்து கெட்ட வாடை காருக்குள் வருவதை தவிர்க்க, மறுசுழற்சி செய்யும் வசதியை ஆனில் வைத்தே செல்ல வேண்டும். பெரும்பாலும் இந்த காற்று மறுசுழற்சி மோடில் வைத்தே ஏசியை இயக்குவது அவசியம்.
மேனுவல் ஏசி காராக இருந்தால், ஏசி மெஷினை ஆன் செய்தவுடன் விசிறியின் வேகத்தை அதிகமாக வைக்கவும். அதேவேளையில், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி இருந்தால் ஆரம்பத்தில் ஃபேன் வேகத்தை குறைவாக வைப்பது நல்லது. பின்னர், ஃபேன் வேகத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும்.
அதாவது, ஏசி மெஷினிலிருந்து உலர் காற்று விண்ட்ஷில்டின் உட்புறத்தில் பீய்ச்சி அடிக்கும். வெளிப்புறத்தைவிட உட்புறத்தில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும்போது விண்ட்ஷீல்டில் வெண் படலம் சீக்கிரம் போகாது. அப்போது, ஹீட்டர் மோடிற்கு ஏசி சிஸ்டத்தை மாற்றிக் கொள்வதுடன், விசிறியின் வேகத்தை அதிகபட்சமாக வைத்தால் உடனடியாக மறைந்துபோகும். மேலும், ஏசி.,யின் குளிர்ச்சியான மோடில் வைத்து இயக்கினால் வெண்படலம் மறையும். ஆனால், சற்று நேரமெடுத்துக் கொள்ளும்.
ஆனால், அதிக வெப்பத்தில் தொடர்ந்து வைக்க வேண்டாம். வெண்படலம் மறைந்த பின்னர், உடனடியாக விசிறியின் வேகத்தை இரண்டாவது பாயிண்டிற்கு கொண்டு வந்துவிடுங்கள். இதன்மூலமாக, மிதமான வெப்பத்தில் சிறப்பான பயணத்தை அனுபவிக்க முடியும்.