இலங்கையில் தேவாலயங்களிலும், விடுதிகளிலும் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தியபடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தண்ணீர் தீவு என்று அழைக்கப்படக்கூடிய இலங்கை கண்ணீரால் நிரம்பி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்
மதம் வாரியாக அனைவரும் பிரிந்து வாழ்கிறோம், இருப்பினும் ஒற்றுமை என்பது வெறும் பேச்சில் மட்டும் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

