அடிப்படை வாதிகளின் பேரழிவுத் தாக்குதல்களால் நாம் மட்டுமல்ல என்பதையும் சமாதான சகவாழ்வை விரும்பும் இலங்கை முஸ்லிம் மக்கள் முழுமையும் எங்களைப் போன்று பாதிக்கபட்டவர்களே என்பதை உணர்வது எமது மனிதக் கடமையாகும்.
தாக்குதலில் இறந்த நம் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக எண்ணி அழுகிற முஸ்லிம் சகோதர சகோதரிகளோடு சமூக வலைத் தழங்களில் பேசி நானும் கலங்கியிருக்கிறேன்.
இவ்வாறு எழுத்தாளரும், நடிகருமான ஜெயபாலன் அவர்கள் தனது முகப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

