Ads Area

சிறுவர்களின் முதற்கட்ட கல்வி வளர்ச்சியில் முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பெரியது.

பலதரப்பட்ட சூழலில் இருந்து வரும் குழந்தைகளை வழிப்படுத்தி அவர்களை ஒழுங்குபடுத்தி வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஆசிரியருக்கு காணப்படுகின்றது.

சிறுவர்களின் வளர்ச்சியில் முதற்கட்ட கல்வியில் செல்வாக்குச் செலுத்துபவராக முன்பள்ளி ஆசிரியர் விளங்குகின்றார். அவர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும். தற்பொழுது கிழக்கு மாகாணத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற 3000.00 ரூபாய் கொடுப்பனவை 4000.00 ரூபாயாக உயர்த்தியுள்ளது அதற்காக கிழக்கு மாகாண ஆளுநனருக்கு நன்றி கூற வேண்டும்.

முன்பள்ளி ஆசிரியர்களின் தங்களின் கல்வித்தகைமை மற்றும் தொழில்வாண்மை என்பனவற்றை அதிகரித்துக் கொள்ள வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான தேசிய தொழில்த் தகைமை சான்றிதழ் வழங்குவது தொடர்பான முன்னாயத்த மதிப்பீட்டு நடவடிக்கை சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபவத்தில் நேற்றுமுன்தினம் (07) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe