நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமாக தீவிரவாத தாக்குதல்களில் பலியான உறவுகளின் துயரங்களில் பங்குகொள்ளும் முகமாக சம்மாந்துறை முழுவதும் இன்று சோகத்தால் மூழ்கியது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களால் பலியான 300 க்கும் மேற்பட்ட சகோதரங்களின் துயரில் பங்குகொள்ளும் முகமாக இன்று சம்மாந்துறை முழுவதும் துக்க அனுஷ்டிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மிக இரக்கமற்ற காட்டுமிராண்டித்தன இத் தாக்குதலை சம்மாந்துறை மக்கள் கண்டிப்பதோடு கூடிய விரைவில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் எவ் இனத்தைச் சார்ந்தோராக இருந்தாலும் அவர்களுக்கு பாரபட்சமின்றி தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் சம்மாந்துறை மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.

