Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையினால் துக்கதினம் அனுஷ்டிக்கட்டது.

(எம்.எம்.ஜபீர்)

அரசாங்கத்தினால் இன்று தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தியதை முன்னிட்டு  சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் தேசியகொடி அரைகம்பத்தில் ஏற்றப்பட்டதுடன், நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலினால் உயிர்நீத்த உறவுகளுகாகமௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவாக குனமடைய பிராத்தனையும் பிரதேச சபை உத்தியோகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.நஜீம், என்.கோவிந்தசாமி,   பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe