Ads Area

அதிக சத்தம் போட்டு ஒலி எழுப்புபவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.

அதிக சத்தத்தை எழுப்பும் ஒலி எழுப்பிகளுடனான வாகனங்களை சுற்றிவளைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தலைமையில் நேற்று (05) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஒலி மாசடைதலைத் தடுத்தல், எதிர்காலத்தில் ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக எடுக்க வேண்டிய குறுகிய மற்றும் நீண்டகால தீர்மானங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

போக்குவரத்து சட்டங்களை மீறுதல் மற்றும் 105 டெசிபல் மீட்டரை விட அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe