தற்போது நாட்டில் வெயில் கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் கொடுமையில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் வெயிலுக்கு பயந்து வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க எடுக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைபிடிக்க வேண்டியவை
01. வெப்ப அலை மற்றும் - வெப்ப காற்று தொடர்பான வானிலை முன்னறிவிப்புகளை வானொலி, தொலைக்காட்சி செய்திகள் மற்றும் தினசரி நாளிதழ்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
02. போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
03. லேசான வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியலாம். வெளியே செல்லும் போது பாதுகாப்பான கண்ணாடி, குடை, தொப்பி, காலனி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
04. பயணத்தின் போது தண்ணீரை உடன் எடுத்து செல்லவேண்டும்.
05. வெளியில் சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வேலை செய்யும்போது தொப்பி அல்லது குடையை பயன்படுத்தலாம். தலை, கழுத்து, முகம் மற்றும் முழங்கால் ஆகியவற்றை ஈரத்துணியால் பாதுகாக்க வேண்டும்.
06. குளிர்ந்த நீரில் குளிக்கவும்
08. வெப்ப பக்கவாத அறிகுறிகளான சோர்வு, தளர்வு, தலைவலி, வியர்வை ஆகியவற்றை கவனித்து செயல்பட வேண்டும். மயக்கத்துக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகவேண்டும்.
09. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை நிழல் அதிகம் உள்ள இடத்தில் பராமரித்து போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
10. வீட்டில் திரைச்சீலை உபயோகித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து கொள்ளவும். இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.
11. ஈரத்துணி மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்தவும். குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
12. பணியிடத்தில் குளிர்ந்த குடிநீரை பருகலாம்.
13. களப் பணியாளர்கள் நேரடி சூரிய ஒளியின் தாக்கத்தை தவிர்க்க வேண்டும்.
14. கடின வேலைகளை வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்போது செய்துகொள்ளலாம்.
16. கர்ப்பிணி தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியது
01. நிறுத்தப்பட்ட வண்டிகளில் குழந்தைகளையோ, செல்ல பிராணிகளையோ விட்டுச்செல்ல வேண்டாம்.
02. நண்பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
03. கருப்பு நிற ஆடைகள். கனமான மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கலாம்.
04. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடினமான வேலைகளை தவிர்க்கலாம்.
05. வெப்பம் அதிகமாக உணரும்போது சமைப்பதை தவிர்க்கலாம். சமையல் அறை பகுதியில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்கலாம்.
06. உடலில் நீர்ச்சத்தை பாதிக்கும் டீ, காபி, மது மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கலாம்.
07. அதிக புரதச்சத்து உணவுகள் மற்றும் பதப்படுத்தப்படாத பழைய உணவுகளை தவிர்க்கலாம்.

