(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம், வளத்தாப்பிட்டி வீனஸ் விளையாட்டுக்கழகம், ஏனர்ஜி விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் நேற்று முந்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டம் இஸ்மாயில் புர சந்தியிலிருந்து புதிய வளத்தாப்பிட்டி, பழைய வளத்தாப்பிட்டி ஊடாக மல்வத்தை சந்தியினை சென்றடைந்து மீண்டும் வளத்தாப்பிட்டி ஊடாக வளத்தாப்பிட்டி மைதானத்தினை வந்தடைந்தது.
பெண்களுக்கான மரதன் ஓட்டம் புதிய வளத்தாப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பழைய வளத்தாப்பிட்டி சென்று மீண்டும் பழைய வளத்தாப்பிட்டி ஊடாக வளத்தாப்பிட்டி மைதானத்தினை வந்தடைந்து.
இதில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.கே.கலீலுல் ரஹ்மான், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






