நாட்டிற்கு வருகைத் தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (21) நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக இதுவரை 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு சுற்றுலாவிற்காக செல்ல வேண்டாம் என தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

