Ads Area

சம்மாந்துறையில் உள்ள 10 வட்டாரங்களின் அபிவிருத்தி தொடர்பான ஆராய்வுக் கூட்டம்.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள 10 வட்டாரங்களின் அபிவிருத்தி தொடர்பான ஆராய்வுக் கூட்டம்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சினால்  பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தில்  2019 - 2022 ஆண்டிற்குள் உலக வங்கி, ஜரோப்பிய யூனியன், இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் நிதி உதவியில் சம்மாந்துறை பிரதேச சபை பிரதேசத்திலுள்ள 10 வட்டாரங்களில்   மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தும் கூட்டம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இத்திட்டன் கீழ் பிரதேசத்திலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னுரிமையடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe