சம்மாந்துறை விவசாயிகளுக்கான தீர்வு தான் என்ன? அசமந்நமான நிலையை கடைபிடிக்கும் நீர்ப்பாசன திணைக்களமும் ஊரின் முச்சபைகளும் ஊர் தலைமைகளும்.
சம்மாந்துறை என்பது அம்பாறை மாவட்டத்தின் முதுகெலும்பு என்று சொல்லக்கூடிய ஊராகும்.ஊர் மக்களின் பிரதான தொழிலாக காணப்படுவது விவசாயம்.இந்த மக்களுக்கு அந்த விவசாயமே இப்போது கேள்விக்குரியாகி உள்ளது.மக்களோ என்ன செய்வது என்ற தெரியாமல் திகைத்த நிலையில் உள்ளனர்.
உதாரணமாக பெரும் நிலப்பரப்பு கொண்ட "C" வாய்க்கால் முழுமையாக செய்ய முடியாத நிலை காணப்பட்டது.அவ்வாறு இருக்கையில் சிறிதளவு பிரதேங்களுக்கு நீரை வழங்கக்கூடிய ஏற்பாடுகள் நடந்தாலும் அதனை எதிர்ப்பதற்கே நம்மூர் சில மேதைகள் இருக்கிறார்கள்.இதனால் அந்த குறித்த நிலப்பரப்பும் இப்போது செய்கையாக பண்ண முடியாத நிலையில் உள்ளது.இது யார் செய்த தவறு??
இது ஒருபுறம் இருந்தாலும் நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடு மிகுந்த கவலையளிக்கிறது.ஏனென்றால் ஆரம்ப கூட்டம் மற்றும் முன்னோடிக்கூட்டங்களின் போது அனைத்து நிலப்பரப்பு செய்யப்படும் என்று கூறியதாலும் அதன் பின்னரான சந்திப்புகளின் போதும் விவசாயிகளிடம் நீங்கள் விவசாயம் செய்வதற்கான வேலைகள் தொடங்குங்கள் என சொல்லி இருக்கிறார்கள்.இதனை கருத்தில் கொண்ட விவசாயிகள் உழவுதல்,வரம்பு கொத்துதல் மற்றும் பதப்படுத்தல் போன்ற ஏராளமான வேலைகளை செய்து தமது பணத்தை செலவளித்துள்ளார்கள்.அவ்வாறு செய்யப்பட்ட பெரும்பாலான விவசாயிகளின் நிலங்களை இம்முறை செய்கை செய்யப்பட அனுமதி வழங்கப்படவில்லை.இவ்வாறு இருந்தால் அவ்விவசாயிகள் செலவளித்த பணத்துக்கான வழி தான் என்ன? ஏற்கனவே இங்கே விவசாயிகளுக்கு பெரும் இலாபம் தானே கிடைக்கிறது அதில் இது வேறயா???
இப்படியான ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது நம்மவர்கள் ஒற்றுமை இல்லை,அசமந்தமான நீர்ப்பாசன திணைக்களம்,ஊர் சபைகள் கணக்கில் எடுக்காமல் இருப்பது இவைகளுக்கான காரணம் தான் என்னவோ!!!
விவசாயம் பண்ணவே இவ்வாறான தடைகள் வருவது நம் எதிர்கால சந்ததியினருக்கு அழிவையை ஏற்படுத்தும்..
R.றுஸைக் அஹமட்