சம்மாந்துறை அல்-அர்ஷத் மஹா வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக 9ஏ சித்திகள் பெற்ற மாணவியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம். அப்துல் றஹீம் அவர்கள் தலைமையில் அண்மையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கடந்த ஆண்டு 3ஏ சித்திகள் பெற்று பல்கலைக்கழக தெரிவு பெற்ற மாணவ-மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
1994ம் ஆண்டு இப் பாடசாலையில் சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக 9ஏ சித்திகள் பெற்றுக் கொண்டமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

