Ads Area

அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக வேதநாயகம் ஜெகதீசன்!

காரைதீவு  நிருபர் சகா.

அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக உடன் செயற்படும் வண்ணம் காரைதீவு பிரதேச செயலாளர்  வேதநாயகம் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.. பொதுநிருவாக அமைச்சின் நியமனக்கடிதம் அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவர் (2) செவ்வாய்க்கிழமை அம்பாறைசென்று அதனைப்பெற்றுள்ளார்.

இலங்கை நிருவாகசேவையின் சிரேஸ்ட்ட முதலாந்தர அதிகாரியான வே.ஜெகதீசன் அமைதியான ஒரு சிறந்தநிருவாகி. ஏலவே விசேட முதலாந்தர அதிகாரி கதிர்காமத்தம்பி விமலநாதன் மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி பதவியுயர்வுபெற்று கொழும்பில் அமைச்சின் பிரதிச்செயலாளராகச்சென்றார். அதன்பிற்கு சிலமாதங்கள் அப்பதவி வெற்றிடமாகவிருந்தது.அந்த இடத்திற்கு வே.ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7மாதங்களாக  காரைதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிவரும் வே.ஜெகதீசன் 2001ம் ஆண்டு மத்திய அரசினால் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவாகி பயிற்சியின் பின்னர் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உதவி பிரதேச செயலாளராக தனது கடமையை பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னர் சிறிது காலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராக கடைமையாற்றி ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றிருந்தார்.

இவர் பதவியுர்வுபெற்றுசெல்வதனால்  இவரது இடத்திற்கு பெரும்பாலும் திருக்கோவில் பிரதேசசயெலாளராகவிருக்கின்ற காரைதீவைச்சேர்ந்த சிவ.ஜெகராஜன் நியமிக்கப்படலாமென எதிர்பார்கக்ப்படுகிறது.

பெரியநீலாவணையைச் சேர்நச்த  வேதநாயகம் சுகிர்தமலர் தம்பதிகளின் புதல்வரான ஜெகதீசன் தனது ஆரம்பக்கல்வியை சரஸ்வதி வித்தியாலயத்திலும் அல்-மனார் மத்திய கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார். கிழக்கு பல்கலைக் கழகத்தின் கணிதப் பட்டதாரியான இவர் மதுரை காமராஜர் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பொது நிருவாக முதுமானிப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe