ரியாத்:
சவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களை குறிவைத்து ஆயுதமேந்திய சிலர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் காவல் நிலையத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தாக்குதல் நடத்த வந்த 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

