Ads Area

இலங்கைக் குண்டு வெடிப்பு இதயத்தை நொறுக்குகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்.

ஈஸ்டர் நாளில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வாழ்வுரிமை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களை மேலும் அச்சுறுத்தும் வகையிலும், மதச்சிறுபான்மையினரின் மனதில் நிரந்தரமான பயத்தை உருவாக்கும் வகையிலும் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் குறித்து இலங்கை அரசு, நியாயமான, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின், குறிப்பிட்டுள்ளார். 

அங்கு நடைபெற்ற குண்டுவெடிப்பும், உயிர்பலியும் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe