By: Mohamed Manasir
இலங்கையில் நான்கு புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான முயற்சிகள் மிக தீவிரமாக நடைபெறுகின்றது என அறிய முடிகின்றது.
அவ்வாறு அமையப் பெற இருக்கும் கைத்தொழில் பேட்டைகளில் சம்மாந்துறை தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சம்மாந்துறையில் மாத்திரம் அப் பேட்டைக்கான காணி இழுப்பறியான நிலையில் / இல்லை என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றது.
இவ் விடயத்தில் தமது அரசியல் தலைமைகளும் , ஊர் மக்களும் சற்று ஆழமாக சிந்தித்து நல்லதொரு தீர்க்கமான எம் மண்ணுக்கு, எம் சமூகத்திற்கும் நன்மை தரும் வகையில், அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒரு முடிவை எடுப்போமானால் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்.
அவ்வாறு நாம் மறுக்கும் சந்தர்ப்பத்தில் நாவிதன்வெளியில் அமைக்குமாறும், அதற்கான காணியை பிரதேச செயலாளர் தருவதாகவும் அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அறிய முடிகிறது.
எனவே இவ்விடயத்தில நன்கு சிந்தித்து செயற்பட்டால் சிறப்பு என உணர்கிறேன்.
"நம்மை விட்டு கடந்த பிறகு கவலைப்பட்டால் வேலை இல்லை சிந்தித்து செயற்படுவோம்"
![]() |