Ads Area

நிகழ்வுகளுக்கு வருவதில் தாமதமாகும் பிரதம அதிதிகளும், அவதிகளும்.

நன்றி - Ihshan J.M.I Mohamed

சமூக பொது நிகழ்சிகளை பொருத்தமட்டில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள். இதற்கான காரணம் பல இருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும்.

நான் அநேக பொது நிகழ்சிகளில் காணும் முக்கிய பிரச்சினை நேர முகாமைத்துவம் காரணமாக சிக்கலடையும் பாரிய பொது நிகழ்சிகள். இதன் தாக்கம் பெறுமதியான நிகழ்சிகள் மற்றும் அவைகள் கூட பெறுமதியற்றதாக மற்றும் குறைப்பாடு நிறைந்ததாக மாற்றமடையும் நிலைப்பாடு.

குறித்த நிலைப்பாட்டிற்கு அடிப்படை காரணமாக எப்போதும் பின்னணியில் நேரடியாக பங்குபெறும் காரணி அச்சபைக்கு அழைக்கப்படும் பிரதம அதிதிகளின் தாமதம். குறித்த அதிதியினை கொண்டு ஆரம்பிக்கப்படவிருக்கும் குறித்த நிகழ்ச்சி அதிதியின் தாமதம் காரணமாக நேர முகாமைத்துவம் குழப்பமுற்று முழு நிகழ்ச்சியின் நிகழ்ச்சி நிரல் அஜெண்டா சிக்கலடைவது.

பொதுமக்கள், பார்வையாளர்கள் வெறுப்படையும் நிலைக்கு அவையின் நேரமுகாமைத்துவம் மாற்றமடைய மற்றுமொரு காரணியாக இருப்பது ஏற்பாட்டு ஒருங்கிணைப்பு குழுவின் வறட்டு நிலைப்பாடு. நேர முகாமைத்துவம் கருத்தில்கொண்டு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் மாற்றம் உண்டாக்காமை, அதிதிகளுக்கான உரை நேர ஒதுக்கீட்டை மட்டுப்படுத்தி வழங்காமை போன்றவற்றை குறிப்பிடலாம்.

என்னைப்பொருத்தமட்டில்  நிகழ்வுகளில் அதிதிகள் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. குறித்த நேரத்தில் எப்பேர்பட்ட நிகழ்ச்சியாக இருந்தபோதும் தாமதியாது அதனை நடாத்துவது என்பது ஒரு ஆளுமை பண்புநிலை (Personality Attitude) ஒன்றாகும். இதனை தனிநபர் அல்லது குழு எப்போதும் கடைப்பிக்க ஆரம்பிக்கமோ அப்போதில் இருந்து மாற்றமாகும் மனநிலை.

" 5 நிமிஷம் லேட் ஆகி போவோம்.... சொன்ன டைம்மிக்கு என்ன ஸ்டாட் பண்ணவா போறாங்கா" இந்த 5 நிமிட தாமதிப்புப் பழக்கம்தான் காலப்போக்கில் அரைமணி நேரமாக மாறுகின்றது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe