அஸாம் மாநிலத்தில் பிஸ்வானாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டுக்கறி விற்பனை செய்ததற்காக ஒரு இஸ்லாமியர் தாக்கப்பட்டு பன்றி கறி சாப்பிட வற்புறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாகுத் அலி (68) என்ற இஸ்லாமியர் ஒருவரை சில பேர் சேர்ந்து கும்பலாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோ அங்குள்ள போலீஸாருக்கு கிடைக்கவே அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
வீடியோவில் அவர் தாக்கப்படுவதும், பன்றிக்கறி சாப்பைட வற்புறுத்தப்படுவதும் பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த ஷாகுத் அலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நக்கீரன் - தமிழ்நாடு.