இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடக அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார்.
முன்பே தகவல்
தாக்குதல்கள் தொடரலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றார்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்
உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும் ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
விசேஷ ஊடக பிரிவு
இந்த தாக்குதல்களை தொடர்ந்து விசேஷ ஊடக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்த இந்த அமைப்பானது 2009ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை 207 பேர் மரணம்
ராணுவம், காவல்துறை மற்றும் விமானப்படை ஆகியற்றின ஊடக பொறுப்பாளர்கள் ஊடகத்தினரை இன்று மாலை சந்தித்தனர். "ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொழும்பில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு உள்ளதால் விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் விமானச் சீட்டை காண்பித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்" என்றனர்.
Via - BBC Tamil

