ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்புசபைக் கூட்டம் இடம்பெற்று வருகிறது. தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து. முற்பகல் 9.00 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படடுவதாக கூறப்படுகிறது, இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்றுள்ளார்.
நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றறது. கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாகவும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக இரு தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர்.
இதனிடையே தற்போது நாட்டில் காணப்படும் நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.