நாட்டின் பல்வேறு இடங்களிலும் முஸ்லீம்கள் குறித்த வெறுப்புணர்வு வேகமாகப் பரவி வருகிறது. 180 பேர் இன்னமும் வெளியில் என்ற செய்தி அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. கடைகளிலும் பஸ்களிலும் வீதிகளிலும் என்று எங்குமே முஸ்லீம் என்ற அடையாளத்தை தீவிரவாதி என்ற முத்திரையுடன் இணைத்து உருவப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்....
பின்னேரம் தெற்கிலிருந்து நண்பர் ஒருவர் கதைத்திருந்தார். தான் வந்த பஸ்ஸிலிருந்து இரண்டு முஸ்லீம்களை இறக்கிவிட்டிருக்கிறார்கள். வேறொரு இடத்தில் படகை கொழுத்தி விட்டிருக்கிறார்கள். சில கடைகளில் பிரச்சினைப்பட்டிருக்கிறார்கள் . இவர்களெல்லாம் நடந்த சம்பவத்திற்காக இப்படிச் செய்பவர்கள் அல்ல. முஸ்லீம்களை அடிப்படையிலேயே வெறுக்கும் நபர்கள். தக்க சமயத்திற்காய் காத்திருப்பவர்கள். வெடிகுண்டுகளை வைப்பவர்களையெல்லாம் தாக்க இவர்களுக்கு வக்கில்லை. எங்காவது யாராவது முஸ்லீம் மாட்டுப்பட்டால் அவரை தாக்கப் புறப்படும் எருமைகள்....
இந்த நாட்டிலிருக்கும் ஒவ்வொரு மனிதருக்காகவும் சக மனிதர் எழுந்து நின்று தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. ஒவ்வொரு தீவிரவாதிக்கெதிராகவும் எல்லா மனிதர்களும் இணைந்து நிற்க வேண்டிய காலமிது....
நான் உறுதியாக நம்புகிறேன் குண்டு வைத்தது தீவிரவாதிகள் தான். அவர்கள் முஸ்லீம்கள் அல்ல....
Kirishath siva subramanian