Ads Area

10 வது வருடமாக நோன்பாளிகளுக்கு இலவசமாக சஹர் மற்றும் இப்தார் ஏற்பாடுகளை செய்து வரும் மூதூர் ஹஸீர் ஹாஜியார்.

10 வது வருடமாக நோன்பாளிகளுக்கு இலவசமாக சஹர் மற்றும் இப்தார் ஏற்பாடுகளை செய்து வரும் மூதூர் ஜலீல் ஹோட்டல் உரிமையாளர் மூதூர் என்.எம்.ஹஸீர் ஹாஜியாரை இன்று மதியம் சந்திக்கக் கிடைத்தது.

அவரின் கடைக்கு மதிய உணவு எடுக்கச் சென்ற போது வழமைபோன்று சிரித்த முகத்துடன் அஸ்ஸலாமு அலைக்கும் மாத்தையா என்று சொல்ல நானும் பதிலுக்கு ஸலாத்தை தெரிவித்து விட்டு பேச ஆரம்பித்தேன்.

வியாபாரம் எல்லாம் எப்படியென்று கேட்க.அதற்கு அவர் இறைவனுடைய கிருபையால் பரக்கத்தாக செல்கின்றது.நாளை சஹரில் இருந்து நோன்பாளிகளுக்கான உணவு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு நான் என்ன ஏற்பாடு என்று கேட்க.இல்லை மாத்தையா ஊரில் உள்ளவர்களுக்கு நோன்பு பிடிப்பதில் பிரச்சினை கிடையாது.வெளியூர்களில் இருந்து நோன்பு காலத்தில் மூதூருக்கு வருபவர்கள் நோன்பு பிடிக்கும் போதும் திறக்கும் போது பெரும் சிரமங்களை எதிர் கொள்வதை நான் பல தடவைகள் அவதானித்திருக்கின்றேன்.இதனால் கடந்த 10 வருடங்களாக அவர்களுக்கு இலவசமாக நோன்பு பிடித்து திறப்பதற்கான உதவிகளை செய்து வருகிறேன் என சிரித்த முகத்துடன் தெரிவித்தார்.

அதற்கு நான் எத்தனை பேர் வந்தாலும் நோன்புக்கான ஏற்பாடுகளை செய்வீர்களா என்று கேட்டேன்.நிச்சயமாக எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன்.இறைவன் நமக்கு தந்திருக்கின்றான்.அதில் நோன்பாளிகளுக்கு கொடுப்பதால் எனக்கு ஒன்றும் குறைந்து போகாது.நாம் எந்தளவுக்கு கொடுக்கின்றோமோ அந்தளவு இறைவனும் நமக்கு பறக்கத் செய்வான்.அதனை எனது வியாபாரத்தில் கண்டிருக்கின்றேன் என சிரித்த முகத்துடன் தெரிவித்தார்.

கதைத்து முடிந்தவுடன் உங்களை போட்டோ ஒன்று எடுக்கலாமா? என்று கேட்க இல்லை எடுக்க வேண்டாம். இதனை எடுத்து முநூலில் போட்டால் நான் கொடுப்பதற்கு பிரயோசனம் இல்லாமல் போய் விடும் இறைவனுக்கு மாத்திரம் தெரிந்தால் போதும் என வழமையான சிரிப்போடு தெரிவித்தார்.

இல்லை இல்லை உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களை வெளிக் காட்டுகின்ற போதுதான் இன்னும் பலர் இதை பார்த்து உதவி செய்ய முன்வருவார்கள் என அவரிடம் தெரிவித்ததும் அப்படி என்றால் பிரச்சினை இல்லை.புகழுக்கு என்றால் படம் எடுக்க வேண்டாமென தெரிவித்தார். அதன் பின் அவரை படம் எடுத்த போதும் அவர் அமர்ந்திருந்த மேசையில் ஒழிந்திருந்தவாறு அனுமதி வழங்கினார்.

அல்லாஹ் இவரது வியாபாரத்தில்ல மென்மேலும் பறக்கத் செய்வானாக!

Thanks - Mohamed Buharys
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe