(எம்.எம்.ஜபீர்)
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் நாம் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் மரநடுகை வேலைத்திட்டம் (0 7) இன்று நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சம்மாந்துறை பிரதேசத்தில் பசுமையான சூழலை ஏற்படுத்தும் வகையில் எஸ் வாய்க்கால், முஅல்லா மஹல்லா பள்ளிவாசல் மையவாடி வளாகம், சபூர் பள்ளி வீதி போன்ற பிரதேசங்களில் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிராந்திய நீர்பாசன பொறியியாளர் எம்.எஸ்.எம்.நவாஸ்;, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சீ.எம்.சஹீல், ஏ.எம்.எம்.றியாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி, கே.எல்.சிஹாமா, எஸ்.எம்.எஸ்.நிலுவ்பா, சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சனசமூக நிலையங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.