Ads Area

ஹபாயா அணிவதற்கு எதிராக யாரேனும் செயற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒருவர் அவர் விரும்பும் மதத்தை பின்பற்றவும், அம் மதத்தின் கடமைப்பாடுகளையும். சட்ட திட்டங்களையும நடைமுறையில் பின்பற்றவும் கூடிய உரிமைகளை அடிப்படை உரிமையாக கொண்டவராக உள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போன்ற பாரதூரமான காரணங்களுக்காக மாத்திரமே மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பின்பற்றல்கள் மீதான தடைகளை கொண்டு வரலாம்.

அந்த வகையில் அவசர கால சட்டத்தின் கீழ் இலங்கையில் கொண்டு வரப்பட்ட முஸ்லிம் பெண்களின் முகத் திரை ( burqa/ niqab) மீதான தடையை இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால் அந்தத் தடை முகத் திரைக்கு மாத்திரமே தவிர “ஹிஜாப்” ( தலையை மறைத்தல் ) யிற்கு அல்ல.

ஆகவே, ஹிஜாபை கழட்டும் படி யாரேனும் வற்புறுத்தினால், அது மனித உரிமைகள் மீறலாக கொள்ளப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு உற்படுத்தவும் முடியும்.

ஹிஜாப்பை கழட்டும் படி வற்புறுத்தியவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் பல, சர்வதேச ரீதியாக வெற்றி பெற்று உள்ளமையை இங்கு குறிப்பிட வேண்டும்.

ஹிஜாப் விடயத்தினால் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்கள், பாடசாலை இடம் மாற்றம் போன்ற தற்காலிக தீர்வுகளை தேர்ந்தெடுக்காமல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதி கேட்டு மனுத் தாக்கல் செய்து, தம் அடிப்படை உரிமையில் யாரும் இனி வரும் காலங்களில் தலையிடாதபடி நிரந்தர தீர்வொன்றை நிலை நாட்ட முன் வர வேண்டும்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் முன் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம், இன்ஷா அல்லாஹ்.

கடந்த வருடம் திருகோணமலை பாடசாலை ஒன்றில் ஹிஜாப் அணிந்த ஆசிரியைகளுக்கு நடந்த அநீதியை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களின் மனுக்களை தீர விசாரித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகள் இலங்கை முஸ்லீம் பெண்களின் ஹிஜாப் உரிமை பற்றி தெளிவான விளக்கம் தரும் ஒரு ஆவணமாக உள்ளது.

இதனைப் பற்றிய அறிவு அனைவராலும் படித்தறியப்பட்டால், எதிர்காலத்தில்
இப்படியான ஒரு பிரச்சினை வருவது தடுக்கப்படுவதோடு முஸ்லிம் பெண்கள் தம் ஹிஜாபை கழட்ட வேண்டிய, தொழில் ரீதியான இடமாற்றங்கள் பெற வேண்டிய அவசியங்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அது சம்மந்தமான கீழே உள்ள கட்டுரையை மட்டும் வாசியாது, அதன் கீழே இருக்கும் link யிணை click செய்து ஆணைக்குழுவின் முழு பரிந்துரைகளையும் வாசித்தல் நன்று. இதன் தமிழ் மொழி பெயர்ப்பினை விரைவில் பகிர முயற்சிக்கிறேன்.

https://www.colombotelegraph.com/index.php/muslim-teachers-can-wear-abaya-human-rights-commission-of-sri-lanka-rules/?fbclid=IwAR12iqbbFTNlAIXki2gba3tez0QOtpqkdbHB5BrWCmiU2YS-vPOQDeKBkE8

To read HRCSL recommendation in full, click here http://hrcsl.lk/english/wp-content/uploads/2019/04/HRC-TCO-27-18-HRCSL-recommendation-_English.pdf


Maryam Naleemudeen 
Deen & Associates 
Solicitor ( Australia) 
Attorney at Law ( Sri Lanka)
‭ + 61 444 517 460‬
admin@deenassociates.com.au




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe