மட்டக்களப்பு, புனாணை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் செயற்பாடுளையும் ஏனைய நடவடிக்கைகளையம் ஒழுங்குபடுத்த திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று சாய்ந்தமருதில் ஏற்பாடாகியிருந்த மக்கள் சந்திப்பல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.