Ads Area

மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்காக புதுடெல்லி செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி!

எதிர்வரும் 30ம் திகதி புதுடில்லியில் நடைபெறவிருக்கும் இந்நிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலகஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் புதுடில்லி பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இன்று அந்த அதிகாரி இந்நிய ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவும், பிரதமர் மோடியும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டதால் முறைப்படியான அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்படும் வரை தாங்கள் எதனையும் உறுதி செய்ய கூடிய நிலையில் இல்லை என இந்நிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கொழும்பில் உள்ள த இந்து பத்திரிகையின் நிருபருக்கு தெரிவித்துள்ளார்.


தற்போதைய தருணத்தில் இவ்விடயம் தொடர்பில் தங்களிடம் உரிய தகவல்கள் ஏதும் இல்லை எனவும், தீர்மானம் எடுக்கப்பட்டதும் ஊடகங்களுக்கு தகவல்களை பகிரந்துக் கொள்வோம் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. அயல் நாடுகளின் அரச தலைவர்களும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று இராஜதந்நிர தகவல்கள் தெரிவிக்கின்றன.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe