(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் நாவிதன்வெளி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் ரீ.கலையரசன் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சவளக்கடை மத்தியமுகாம் ஜம்மியத்துல் உலமா சபை தலைவரும், கல்முனை அல்-ஹமியா அரபிக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் ஏ.சீ.தஸ்தீக் மதனி விஷேட மார்க் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர், நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் எம். அப்துல் றகீம், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.பீ.சுபைதீன், எம்.ஜஹான், மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி வீ.எம்.பத்மசிறி, உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.