Ads Area

இனவாத ஊடகங்களை விளம்பரத்திற்கு நாடுவோர் குற்ற உணர்வுக்குள்ளாக வேண்டும்.

பெரோஸ் முஹம்மட்.

ஜனநாயகத்தை அதன் முழுமையான பொருளில் பாதுகாக்கவும், நிலைநிறுத்தம் செய்யும் முக்கியமான பொறுப்பு பாராளுமன்றம், அரசநிர்வாகம், நீதிமன்றம் மற்றும் ஊடகங்களுக்கே உள்ளன. ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக இவைகள் இருந்தாலும் ஊடகங்களுக்கு சற்று கூடுதலான பொறுப்பு உள்ளது.

ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து நழுவும்போது, அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியதே அவற்றின் கடமை. ஊடகங்கள் தங்கள் பாதையிலிருந்து தடம் மாறுவது ஜனநாயகத்தையே ஆபத்துக்குள்ளாக்கும்.

ஆனால் இன்றைய இலங்கை தேசத்து ஊடகங்கள் இந்த சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறதா என்ற கேள்விக்கே இடம் இல்லை.இங்கே ஊடகங்கள் தமக்கே உரிய அஜெண்டாக்களில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன 50ரூபா கொடுத்தா அம்மணமாய் நடக்கும் ஊடகங்களே இன்று இலங்கை தேசத்தை ஆண்டு (அழித்துக்)கொண்டிருக்கின்றன. கான்டராக்ட் இல் இயங்கும் கூலிப்படைகளை போல இலக்கு வைக்கப்பட்ட பிரமுகர்களை கச்சிதமாக கழுவி ஊற்றுகிறார்கள் கிடைக்கும் பணத்திற்கு ஏற்ப.

உண்மை, நடுநிலை, நம்பகத்தன்மை என்றெல்லாம் வாய்கிழிய ஊளையிட்டு இறுதியில் தமது வக்கிர புத்தியைத் தணிப்பதற்கு வசைபாடும் ஊதுகுழல்களாகவே சில ஊடகங்கள் மாறிவிடுகின்றன.

கடந்த ஆட்சியில் இருந்த ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள் ஓரளவுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டு ஊடகங்களுக்கான சுதந்திரத்தினை இந்த அரசு முழுமையாக அமுல்படுத்தத் துவங்கிய 2015ற்கு பிறகு ஊடகங்கள் தங்களது சமூகப் பொறுப்பிலிருந்து பெருமளவில் தடம்புரண்டு கொண்டிருக்கிறது எனலாம். அதன் உச்சத்தை கடந்த இரண்டு வாரங்களாக முஸ்லிம்கள் அவதானித்தே வருகின்றனர். குறிப்பாக சக்தி ஊடகம் தங்களது கடந்தகால மோசமான நடவடிக்கைகளை தாங்களே முறியடித்து மிகவும் கேவலமாக நடந்து கொண்டுவருவதை நாம் அவதானித்தவர்களாக உள்ளோம்.

தமிழ் மொழியின் சக்தி என்று வீறுடுகிறது சக்தி.அப்படி என்றால் என்ன ?சக்தி டீவி என்பது இலங்கையில் தமிழ் பேசும் 25 வீதமானோரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.ஆனால் அப்படி எதுவும் இல்லை.ஒரு குரூர மெண்டல் எப்படி நாடாளுவானோ அப்படித்தான் நடந்து கொள்கிறது சக்தி.சக்தியால் சிறுபான்மையினர் அடைந்த விமோசனம் என்ன ? மின்னல் என்றும் விவாதம் என்று உப்புப் பெறாத நிகழ்ச்சிகளை நடத்தி இனங்களுக்கு இடையே குரோதத்தையும் மதத்துவேஷத்தையும் வளர்த்ததைத் தவிர சக்தி எதுவும் செய்யவில்லை.

இங்கே உண்மையான பிரச்சனைகள் பேசுபொருளாக மாற்றப்படாமல் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும், ஒரு இனத்தை மற்றைய சகோதர இனத்தவர்களுக்கு எதிரியாக சித்தரித்து காட்டும் முயற்சியுமே அரங்கேறிவருகிறது.

இரண்டு தனிமனிதர்களை மையமாகக் கொண்ட விமர்சனங்களும், இரண்டு முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை தோலுறிக்கும் நிகழ்வுகளுமே இவர்களின் அன்றாட செய்திகளாகிப் போயின.

செய்தியின் இடைநடுவே நடுநிலை செய்தித்தளம் என்று தங்களுக்கு தாங்களே நேர்மைச் சான்று கொடுக்கும் கண்ணைக்கட்டும் காட்சியும் விளம்பரப்படுத்தப்படும்., அதாவது வேசிக்குப் பெயர் கண்ணகி என்பது போல!
பெரும்பாலான மக்களும் இப்படிப்பட்ட ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டுதான் நம்பித்தொலைத்து விடுகின்றனர். ஆனபோதும் மக்கள் எல்லாக் காலங்களிலும் முட்டாளாக, உணர்வற்றவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் உண்மையை உணரும்போது இப்பேர்ப்பட புளுகுதளங்கள் தடமின்றி போன வரலாறுகளும் உண்டு.

கட்டவீழ்த்து விடப்பட்டுள்ள கல்வி வியாபாரம், வேலையற்று வீதியில் அவையும் இளைஞர் கூட்டம், கல்வி நிலையங்கள், பணியிடங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப வாழ்வாதாரம், மக்கள் பணத்தை சுரண்டி சுகபோக வாழ்க்கை வாழும் மக்கள் பிரதிநிகள் என அரச நிர்வாகத்தில் நடந்தேறும் அநீதிகள், மக்களின் பிரச்சனைகள் பேசப்படாமல் இனங்களுகிடையில் தீ மூட்டிவிடும் பணியையே இன்று அத்தனை ஊடகங்களு கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன.அதில் சக்தியார் என்றும் முதல் தரம் சேற்றில் புரளும் பன்றிகளுக்கு நாற்றம்தானே நறுமணம் என்பதுபோல இவர்களுக்கு செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களும் கிஞ்சித்தும் சமூகபொறுப்பற்றவர்களாக நடந்துகொள்வது கவலைக்குரிய விடயம் தனிப்பட்ட ஒரு சமூகத்தை நாறடிக்கும் இந்த கேடு கெட்ட ஊடகங்களுக்கு தக்க பதிலடியை கொடுக்க புத்திஜீவிகள் முன்வரவேண்டும்.

செய்திகள் மட்டுமல்ல...இந்தப் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் கூட சமூக அக்கறையற்றவையே துணிவு மிக்க எழுத்தாளர்கள்-ஊடகவியலாளர்கள்-பதிவர்கள்-புத்திஜீவிகள் என எல்லோரும் இவற்றுக்கெதிராகத் தமது கருத்துக்களை ஓங்கி முழங்க வேண்டும். இன்னும் துணிவு மிக்கோர் இவ்வாறான தொலைக்காட்சிகள்- இணையத் தளங்களை நிர்வகிப்போர்க்குத் தமது ஆட்சேபனைகளை அடிக்கடி எழுத வேண்டும். இத்தகு ஊடகங்களை விளம்பரத்திற்கு நாடுவோர் குற்ற உணர்வுக்குள்ளாக வேண்டும்.

அக்கறையுடனும் துணிவுடனும் மேற்கொள்ளப்படும் நமது நடவடிக்கைகள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். முயற்சிப்போமா...?

பக்கசார்பு ஊடகங்கள் எம்தேசத்தின் சாபங்கள்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe