Ads Area

ஸ்ரீ பத்திரகாளியம்பாள் கோயிலிலிருந்து பல ஆயுதங்கள் மீட்பு.

பாறுக் ஷிஹான்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்பாள் கோயிலிலிருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ பத்திரகாளியம்பாள் கோயில் வாழை தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு ஒன்று ரம்போ கோடாரி மற்றும் வாள் ஒன்று பொலித்தீன் உறை ஒன்றில் இடப்பட்டு உரப்பை ஒன்றில் போடப்பட்டு காணப்பட்டது.

இதன் போது கோவில் பராமரிப்பாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ஆலய பரிபாலன தலைவர் வி.சுப்பிரமணியம் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு சோதனை மேற்கொண்டு ஆயுதங்களை கைப்பற்றியது.

அண்மைக்காலமாக சம்மாந்துறையில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்று சோதனைகள் நடாத்தப்படுவது குறிப்பிடத் தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe