சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வைத்திய சிகிச்சை (கிளினிக்) நிலையங்களுக்கு செல்லும் மக்களுக்கு கதிரையின்மையால் எதிர்கொள்ளும் சிரமத்தினை கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் யூ.எல்.அஸ்பரின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை பிரதேச சபையினால் 07 வைத்திய சிகிச்சை (கிளினிக்) நிலையங்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பனவற்றிற்கு கதிரை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதற்கமைய மலையடி கிளினிக் நிலையம், சென்னல் கிராமம் கிளினிக் நிலையம், வளத்தாப்பிட்டி கிளினிக் நிலையம், உடங்கா கிளினிக் நிலையம், நெய்னாகாடு கிளினிக் நிலையம், விளினியடி கிளினிக் நிலையம், கல்லரிச்சல் கிளினிக் நிலையம், சம்மாந்துறை வைத்திய அதிகாரி காரியலயம் ஆகியவற்றிற்கே கதிரை தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான யூ.எல்.அஸ்வர், என்.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.