Ads Area

சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள தரம்-5. மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அனுசரணையுடன் தரம்-5. மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை கடந்த (23) வியாழக்கிழமை  வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைபெற்றது.

இறக்காமம் கோட்டத்தில் 90% மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம்  இறக்காமம் கோட்டப் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து கடமையில் ஈடுபட்டுள்ள அதிபர்  இணைப்பாளர்கள்ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் பெற்றோர் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதே வேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் இப்பரீட்சை நடைபெறுவதையிட்டு பெற்றோர்கள்  சமூக நலன்விரும்பிகள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.பணிப்பாளர் பரீட்சை நடைபெறுவதை அவதானிப்பதைக்காணலாம்.


காரைதீவு  நிருபர் சகா





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe