ஜனாதிபதியின் நாம் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபையினால் விழிப்புணர்வு நிகழ்வு.
(எம்.எம்.ஜபீர்)
ஜனாதிபதியின் நாம் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டத்தின் கழிவுகளை உக்கக்கூடிய, உக்காத கழிவுகளை தரம் பிரித்தறியும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஏ.யோகனந்தன், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.