ஜனாதிபதி செயலகத்தின் "கிராம சக்தி" வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது.
இதற்கமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பங்கேற்புடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட "இயன் மருத்துவ அலகு" கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் நிருவாகத்தினால் ஆளுநரின் சேவையினைப்பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.