கிழக்கு மாகாண உள்ளுராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தனித்து விடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வீரமுனை வண்டு வாய்க்கால் வீதி 50 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனீடப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், சம்மாந்துறை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நகீர், பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.