திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்து ஆறு வீதிகள் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் “ரன் மாவத்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 50 மில்லியன் (5 கோடி ரூபாய்) நிதியில் புனரமைக்கப்படவுள்ளன.
இதற்கமைய ஆண்டிட சந்தியிலிருந்து செந்நெல் கிராமத்திற்குச் செல்லும் சமீட்புர வீதி, பழைய மார்க்கட் இருந்து ஆரம்பமாகும் ஆட்டுக்கருத்தார் வீதி, சம்மாந்துறை -7, ஹாஜியார் வீதி, அல்-அர்ஷத் வீதியிருந்து அரம்பமாகும் தினகரன் வீதி, கைகாட்டி சந்தியிலிருந்து ஆரம்பமாகும் ஏற்றுமதிக் கிராம வீதி மற்றும் மல் -7ஆம் வீதி ஆகிய வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.