Ads Area

இலங்­கைக்குள் எந்­த­வித சர்­வ­தேச இரா­ணுவ படை­களும் கள­மி­றக்­கப்­ப­ட­வில்லை.

அமெ­ரிக்­கப்­ ப­டை­களை இலங்­கைக்குள் கள­மி­றக்­கப்பட­வில்லை என இரா­ணுவ ஊட­கப்­ பேச்­சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் சென­வி­ரத்ன தெரிவித்தார். இலங்­கைக்குள் அமெ­ரிக்க இரா­ணுவம் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­வ­ரு­கின்ற நிலையில் அதன் உண்­மைத்­தன்மை குறித்து வின­விய போதே அவர் இவ்வாறு குறிப்­பிட்டார்.

     
'இலங்­கைக்குள் எந்­த­வித சர்­வ­தேச இரா­ணுவ படை­களும் கள­மி­றக்­கப்­ப­ட­வில்லை, குறிப்­பாகஅமெ­ரிக்­காவின் இரா­ணு­வப்­ப­டைகள் இலங்­கைக்குள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக தொடர்ச்­சி­யாக கேள்வி எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. இதற்கு சில புகைப்­ப­டங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்டும் வரு­கின்­றன.

எமது பாது­காப்பு படை­யினர் மாலி தீவு­க­ளுக்கு அனுப்­பப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் எமது இரா­ணுவ வாக­னங்கள் சில பரி­சோ­திக்­க­ப்பட்டு வரு­கின்­றன . இந்த வாக­னங்கள் அனைத்­துமே எமக்கு ஐக்­கிய நாடுகள் அமை­திப்­படை மூல­மாக வழங்­கப்­பட்ட வாக­னங்கள். அவற்­றையே நாம் பரி­சோ­தனை செய்து தயார்­ப­டுத்தி வரு­கின்றோம். அந்த புகைப்­ப­டங்­களை வைத்­துக்­கொண்டே சில வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது.

எனினும் அமெ­ரிக்க இரா­ணுவ படை­களை இலங்­கைக்குள் கொண்­டு­வ­ர­வில்லை. அவர்கள் வரு­வ­தாக கோரவும் இல்லை. இலங்­கையில் தற்­போது நிலவும் பதற்­ற­மான நிலை­மை­களை கையாள எமது முப்­ப­டை­யினர் மற்றும் பொலிஸ் மட்­டுமே ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நிலை­மை­களை வழ­மைக்கு கொண்­டு­வந்­துள்ளோம்.

மக்கள் எந்­த­வித அச்­சமும் இன்றி அமை­தி­யாக வாழக்­கூ­டிய சூழல் இன்று நில­வு­கின்­றது. ஆகவே பொய்­யான தக­வல்­களை சிலர் பரப்­பு­வதன் மூல­மாக மக்­களின் இயல்பு வாழ்­கையை குழப்­பவே முயற்­சித்து வரு­கின்­றனர். தொடர்ச்­சி­யாக தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சகல பகுதிகளிளும் முப்படையினர் குறிப்பாக இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்பினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe