சமீபத்தில் வெளியான 'எல்கேஜி' படத்தில் நடித்துமுடித்த திருப்தியில் இருப்பவர், ப்ரியா ஆனந்த். 'எதிர்நீச்சல், 'வணக்கம் சென்னை' போன்ற படங்களில் நடித்தவரான ப்ரியா ஆனந்த், இவர் தான் ஒரு இந்துப் பெண்ணாக இருந்தாலும் முஸ்லிம்கள் நோற்கும் புனித ரமலான் நோன்பை நோற்று வருவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
''அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்துக் கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்குப் பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது'' என குறிப்பிட்டார்.