தர்க்கா டவுன் பிரேக்கிங் நிவுஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் குறும் ஒன்றின் அட்மின் மற்றும் சிலரும் அளுத்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் 20-23 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கைதைத் தொடர்ந்து இன்று உடனடியாக 25 பேர் வரை அக் குழுவிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாட்ஸ்அப் குழுவானது கடந்த 3 வருடங்களாக செயற்பட்டு வந்த குறுாம் என்றும் அதனை உருவாக்கிய அட்மின் வெளிநாட்டில் கடமை புரிந்து நாட்டுக்கு திரும்பி வந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த மாதம் இடம் பெற்ற பாரிய தீவிரவாத தாக்குதலின் பின்னர் சமூக வலைத்தளங்கள் கண்கானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.