Ads Area

பயங்கரவாதிகளை அடையாளம் காட்டியவர்களில் 95 வீதமானோர் முஸ்லிம்களே.

பயங்கரவாதிகளை அடையாளம் காட்டுவதில் 95 சதவீதம் முஸ்லிம்களே முன்னின்று செயற்பட்டுள்ளனர்.

அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மீது குற்றம் ஒப்புவிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் மஹிந்தானந்த அழுத்கமகே விடம் இருக்கும் என்றால் அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஏன் சமர்ப்பிக்க முடியாது என பிரதி அமைச்சர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.

பலய விவாத நிகழ்ச்சி நேற்று இரவு இடம் பெற்ற போது அவர் இவ்வாறு கூறினார்

அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மீது முதலில் கொண்டுவர வேண்டியது நம்பிக்கை யில்லாப் பிரேரணையல்ல மாறாக சட்ட நடவடிக்கையாகும் அதனைவிடுத்து அரசியல் ரீதியான சேறு பூசல்களை செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சியும் 52 நாட்களில் அடைந்து கொள்ள முடியாது போன ஆட்சியின் வேதனையாகவே இதனை பார்க்கின்றேன்.

இல்லாத ஒன்றினை இருப்பதாக நாட்டு மக்களுக்கு மத்தியில் எதிர்கட்சி உருவாக்குவதை இதன் மூலம் காணமுடிகின்றது அதே போல் ஒரு சில பயங்கரவாதிகள் செய்த இந்த செயலை வைத்துக் கொண்டு அனைத்து முஸ்லிம் சமூகத்தினையும் இந்த பயங்கர வாதத்துக்குள் தள்ள வேண்டாம்.

அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் சகோதரர் தொடர்பில் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவிக்கும் கருத்தானது உண்மைக்கு புறம்பானது அவர் தொடர்பில் பொலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே போல் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் இராணுவ தளபதிக்கு அளுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கின்றீரகள் இது பிழையானது இராணுவ தளபதி அதனை மறுத்துள்ளார் எந்த அளுத்தமும் கொடுக்கவில்லை என்று இதற்கான ஆதாரம் ஒளி வடிவில் உள்ளது.

நாடு என்ற வகையில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம் பயங்கரவாதிகளை அடையாளம் காட்டுவதில் 95 சதவீதம் முஸ்லிம்களே முன்னின்று செயற்பட்டு ள்ளனர்.குற்றவாளிகளை நாம் பாதுகாக்கமாட்டோம்.அதே போல் நிரபராதியினை தண்டிக்க விடவும் மாட்டோம்.குறுகிய அரசியல் நோக்கம் கொண்டு தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்கின்றேன்.

நாடு எரிந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நகைச்சுவையாக செயற்படுவதை நிறுத்துங்கள் என மஹிந்தானந்த அழுத்கமகே விடம் கேட்கின்றேன்.

ASFAR


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe