Ads Area

பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்.

பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியினுள் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.இதன்படி, எக்காரணத்திற்காகவும், தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என, அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலை தொடர்ந்து பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 22ம் திகதி தொடங்கப்படவிருந்த போதும், பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு மே 6ம் திகதியே பாடசாலைகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையிலேயே, பாடசாலைகளில் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe