கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீதும் அவரது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலும் திட்டமிட்ட வகையில் விசம பிரச்சாரங்களை சில இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிரவாத தாக்குதலால் முழு நாடுமே பரிதவித்துள்ள நிலையிலும் தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக சமூகத்தை குழப்பும் வகையில் போலியான தகவல்களையும், கருத்துக்களையும் சிலர் வெளியிட்டு வருகின்றனர். சில கடும்போக்கு அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை தமது வங்குரோத்து அரசியலை மீள கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாகவும் - அரசியல் மூலதானமாகவும் பயன்படுத்த முனைகின்றனர்.
ஹிஸ்புல்லாஹ் என்ற தனி மனித ஆளுமைக்கு எதிரான இனவாதிகளின் போராட்டம் இன்று நேற்று ஆரம்பமானது அல்ல. வடக்கைப் போன்று கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை விரட்டியடிக்க விடுதலைப்புலிகள் மேற்கொண்ட திட்டத்துக்கு அவர் முட்டுக்கட்டையாக இருந்த நாள் முதல் இன்று வரை அவர் இனவாதிகளின் பொறியாகவே உள்ளார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து சொந்த மண்ணையும் கிழக்கு மண்ணையும் காப்பதில் அவருக்கு இருந்த பற்றே இன்று தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர் மீதுள்ள வெறுப்புக்கும் - கோபத்துக்கும் காரணம்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு எதிராக போர் கொடி தூக்கிய ‘புலிக்கொடி’ ஆதரவாளர்கள் ஹர்த்தால் செய்தும் கோஷம் எழுப்பியும் எதிர்பார்த்த கனவு இன்றுவரை நனவாகவில்லை. எவர் தமே அவர்களையே மன்னித்து இன,மத பேதங்களுக்கு அப்பால் சேவை செய்த உத்தமர் ஹிஸ்புல்லாஹ்!
ஸஹ்ரான் என்ற தீவிரவாதியுடன் தொடர்பு இருப்பதாக 2015இல் எடுத்த புகைப்படத்துடன் தொடர்புபடுத்தி நிருவுவதற்கு இனவாதிகளும் - இனவாத ஊடகங்களும் முயற்சித்தாலும் அந்த தீவிரவாதி ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக தீவிரமாகவே செயற்பட்டார் என்பது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அன்று LTTEயின் இலக்காக இருந்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று ISIS இன் இலக்காக இருப்பாரே தவிர அவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்குபர் அல்ல என்பது பாதுகாப்பு தரப்புக்கு தெட்டத்தெளிவாகியுள்ளது. இத் தலைமை கிழக்கிற்கு கிடைத்த வரப்பிரசாதமே என்பதில் ஐயமில்லை.
A.R.M. நிப்றாஸ்
சம்மாந்துறை.