Ads Area

LTTE க்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது ISIS தீவிரவாதத்தை முஸ்லிம்கள் அனைவரும் எதிர்க்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளின் போது தமிழ் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. எனினும் இந்த ISIS தீவிரவாத தாக்குதலை முஸ்லிம்கள் அனைவரும் எதிர்க்கின்றனர் என பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாட்டில் இடம் பெற்ற அசம்பாவித சம்பவத்தினால் அப்பாவி முஸ்லிம்களின் மனது நோகும் விதத்திலோ அவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் விதத்திலோ நடந்து கொள்ள வேண்டாம் என தான் அனைத்து பெளத்த மக்களிடமும் வேண்டிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.


முஸ்லிம் மக்கள் சரியான நேரத்தில் தீவிரவாதிகள் தொடர்பில் தகவல்களை வழங்கியமையினாலேயே நடைபெறவிருந்த மேலும் பல தாக்குதல்களை தடுக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe